நாடார்:

======
இனம்: தமிழ்

மொழி: தமிழ், மலையாளம், துளு

பிரிவுகள்:
=========
1) நாடார் : தமிழகம், கேரளம்

2) சாணார்: தமிழகம், கேரளம்

3) கிராமணி (பிள்ளை- பட்டம்): தமிழகம்

4) ஈழவர் : கேரளம், தமிழகம்

5) தீயர்: கேரளம், தமிழகம்

6) வில்லவர்/பில்லவா: கேரளம், கர்நாடகம் (துளுவம்)

7) நளவர்: ஈழம் (தமிழ்)

8) மூப்பன்: தமிழகம்

நாடார், சாணார் ஆகியோர் தமிழகத்தின் தென் பகுதியிலும், மூப்பன் அல்லது கொங்கு நாடார் மேற்கு மாவட்டங்களிலும் கணிசமாக உள்ளனர். நாடார்கள், கேரளத்தின் தென்பகுதியான திருவிதாங்கூரில் கணிசமாக எண்ணிக்கையினர் ஆவர். இங்கு இவர்கள் மலையாளம் பேசுகிறார்கள்.

கிராமணிகள் பிள்ளை பட்டம் பூண்டு, தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையினராக வாழ்கிறார்கள்.

ஈழவர் திருவிதாங்கூரில் மலையாளமும், குமரி மாவட்டத்தில் தமிழும் பேசுகிறார்கள்.

தீயர் மலையாளம் மட்டுமே பேசி மலபார் பகுதியில் வாழ்பவர்கள், இவர்களுக்கு சாணார், சோவன் என்ற பெயர்களும் உண்டு.

நளவர் ஈழத்தில் வாழும் நாடார்களுக்கு இணையான சாதியினர் ஆவர். இங்கு இவர்களது மொழி தமிழ்.

வில்லவர் மலையாளம் பேசி காசர்கோடு பகுதியிலும் துளு மொழி பேசி தென் கன்னடம் பகுதியிலும் வாழ்பவர்கள்.

பின்னூட்டமொன்றை இடுக