பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம் !

பசுமை புரட்சி நல்ல கீரை நம்மாழ்வார் நல்ல சந்தை நாளை பயிர் செய்ய வேண்டிய மரங்கள் விவசாய மானியங்கள் மரம் வளர்ப்போம் மரக்கன்று தேவைக்கு தொழில்நுட்பம் அறுவடை 922917_570308552999798_13854063_n 943285_568587029838617_773112432_n 944230_568586766505310_431360407_n                                                   பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம் !

————————————————-
விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து, பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்… பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்… ஆச்சர்யம்தானே!

மென்பொருள் பொறியாளர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். நல்ல கீரைஎன்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி, பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்…

சகன்னாதன், கௌதம், ராதாகிருட்டிணன், சலோமிஏசுதாசு, ராமு, விசு, திருமலை, புனிதா, சாம், சிவகுமார், ராசமுருகன், அறிவரசன் ஆகிய 12 பட்டதாரி இளைஞர்கள்!

திருநின்றவூர்-பெரியப்பாளையம் பிரதான சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு இந்த அமைப்பினர், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்து… சென்னையில் நேரடியாக சந்தைப்படுத்தி வருகிறார்கள்.

பண்ணைக்குத் தேடிச் சென்ற நம்மிடம், முதலில் பேச ஆரம்பித்த சகன்னாதன், ”கிராமப் பொருளாதாரத்தப் பத்தி அடிக்கடி நான் சிந்திப்பேன். அதோட தொடர்ச்சியா, கிராம மக்கள்கிட்ட ஆய்வு பண்ணினேன். 240 குடும்பங்கள்கிட்ட ஆய்வு பண்ணினதுல… செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மதுபானங்கள், புகையிலைனு வருடத்துக்கு 1 கோடியே 60 லட்ச ரூபாயைச் செலவு செய்றாங்கனு தெரிஞ்சுது.

படாதபாடுபட்டு இந்தக் குடும்பங்கள் சம்பாதிக்கற பணம்… சம்பந்தமில்லாத யாருக்கோ போறத நினைக்கறப்ப… ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

இந்தச் செலவைக் குறைக்கறதுக்கும், இவங்கள இதுல இருந்து மீட்டெடுக்கறதுக்கும் என்ன வழி?னு யோசிச்சப்பதான்… இயற்கை விவசாயத்தால உரம், பூச்சிக்கொல்லிச் செலவை சுத்தமா ஒளிச்சுடலாம்னு தோணுச்சு.

இதுக்காகவே நம்மாழ்வார் அய்யா நடத்துன பல கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். இயற்கை விவசாயிகள் பலரையும் சந்திச்சேன். அவங்ளோட தங்கி, அவங்க செய்ற விவசாயத்தப் பாத்து, தொழில்முறையா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுகிட்டேன்.

இணைத்த இயற்கை!

அப்போ பன்னாட்டு நிறுவனத்தில் வியாபார மேம்பாட்டாளரா நான் இருந்தேன். அங்க நண்பர்களோட பேசினதுல… நிறைய பேருக்கு இதுல ஆர்வம் இருக்கறது தெரிஞ்சது.

அவங்களையெல்லாம் இணைச்சு… இந்த அமைப்பைத் தொடங்கினோம். முதல் கட்டமா, சென்னை மக்களுக்கு ரசாயனம் தெளிக்காத கீரையை உற்பத்தி செஞ்சு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம்.

அதுக்காக, இந்த 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரை சாகுபடியைத் தொடங்கியிருக்கோம். விளையற கீரையை சென்னையில வாடிக்கையாளர்களுக்கு நேரடியா விற்பனை செய்றோம்.

மொத்தமிருக்கற 12 உறுப்பினர்கள்ல… நாலு பேர் முழுநேரமா செயல்படுறோம். இதுக்காகவே… ஏற்கெனவே நாங்க பார்த்திட்டிருந்த வேலையை விட்டுட்டோம் (சகந்நாத், ராதாகிருட்டிணன் ஆகிய இருவரும் மருத்துவ நிறுவன அதிகாரிகளாகவும்… கௌதம், மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவன நிதி ஆலோசகராகவும், சலோமி ஏசுதாசு ஆந்திர மாநிலத்தில் இருக்கும் டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டி தொண்டு நிறுவன திட்ட அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்).

மத்த உறுப்பினர்கள்.. வாரம் ஒரு முறை வருவாங்க. மாசம் ஒரு முறை கூட்டம் நடத்துவோம். அவங்கவங்க ஆலோசனைகளைப் பரிமாறிக்குவோம்.

இயற்கை உரத் தேவைக்காகவே நாட்டு மாடுகளை வளர்க்கிறோம். இப்போதைக்கு எட்டு மாடுகள் இருக்குது. இயற்கை முறையில விளைஞ்ச பொருட்களை விக்கிறதுக்காக… நல்ல சந்தைனு ஒரு அமைப்பையும் தொடங்கப் போறோம்.

இயற்கை விவசாயிகள், அத்தனைப் பேருமே பயன்படுற வகையில லாபநோக்கம் இல்லாம இதை நடத்தப் போறோம்என்றார் சகன்னாதன்!

கீரையில சின்னச்சின்ன ஓட்டைகள் இருந்தாகூட… பூச்சிக் கீரைனு சொல்லி வாங்க மாட்டேங்கறாங்க சிலர். இயற்கை முறையில விளைவிக்கறப்ப… சில நேரங்கள்ல கீரைகள் இப்படித்தான் இருக்கும். அதோட, பூச்சிகள் சாப்பிடற கீரைகளை சாப்பிடறதால எந்த பாதிப்பும் இல்லைங்கறதுதான் உண்மை. பூச்சிங்க சாப்பிட்டிருந்தா… அது இயற்கையில விளைஞ்ச கீரைனு நம்பி வாங்கலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கற வயல்கள்ல இருந்து வர்ற கீரைகள்தான், பெரும்பாலும் ஓட்டைஇல்லாத கீரையா இருக்கும்.

பொதுவா… காய்கறி, கீரை, பழம்னு எல்லாத்துக்குமே காலம் இருக்கு. அந்தந்த காலம் தான்… அதெல்லாம் நல்லா விளையும். அப்படிப்பட்ட காய்கறிகளை, இயற்கை முறையில எளிதா விளையவெக்க முடியும். ஒவ்வொரு காலதுலயும், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் எது தேவைப்படும்னு இயற்கையே செய்திருக்கற ஏற்பாடுதான் இது.

அதனால, அந்தந்த காலத்துல விளையறதை மட்டும் வாங்கிச் சாப்பிடறதுதான் நல்லது. இந்த உண்மை புரியாம, பலரும் காலம் இல்லாத சமயங்கள்லகூட அந்தக் காய்கள்தான் வேணும்னு வற்புறுத்திக் கேக்கறாங்க என்று தங்களது சிக்கலைச் சொன்னார், முழுநேர ஊழியர்களில் ஒருவரான ராதாகிருட்டிணன்.

விதவிதமா இருக்குது, கீரை!

”முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, சுக்கான், சக்கரவர்த்தினி, பசலைக்கீரை, அரைக் கீரை, சிறு கீரை, கொத்துமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, சிகப்புப் பொன்னாங்கன்னி, கோங்கூரானு சொல்லற சீமைக் காசினி, கொம்புக்காசினி, அகத்தி, முருங்கை, வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், வெந்தயக் கீரை, கல் இளக்கி, காசினி, கறிவேப்பிலை, மணத்தக்காளி, தண்டுக் கீரை, பருப்புக்கீரை, தவசிக் கீரை, சிலோன் கீரை, திருநீற்றுக் கீரை…

இப்படிமுப்பதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை சாகுபடி செய்றோம்என்று பட்டியலிட்டமுழு நேர ஊழியர் கௌதம், கீரை சாகுபடி செய்யும் முறைகள் குறித்து பாடம்சொன்னார்.

நிறைவாகப் பேசிய கௌதம், ” ஒரு பாத்தி அமைக்க, 200 ரூபாய் செலவாகும். முதல் கட்டமா, நாங்க மொத்தம் 50 சென்ட் நிலத்துல 300 பாத்திகள அமைச்சுருக்கோம். இதை ஒரு முறை அமைச்சா… மூணு, நாலு தடவைசாகுபடி பண்ணலாம்.

ஒரு பாத்தியில அதிகபட்சம், 100 கட்டு கீரை பறிக்கமுடியும். ஒரு கட்டுக்கு 5 ரூபாய்க்கு குறையாம விலை கிடைக்கும். பாத்திகளோடஇடைவெளியில அகத்தி, வல்லாரை, தூதுவளை, பிரண்டை மாதிரியான பயிர்களைப்போட்டிருக்கோம். வேலைக்கு 2 பேர் இருந்தா போதும். 300 பாத்தியிலிருந்தும்மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபா வரை வருமானம் கிடைச்சுட்டுருக்கு.

ஒருபானை சோத்துக்கு, ஒரு சோறு பதம் போல, 50 சென்ட் நிலத்துல பல விடயங்களைக் கத்துக்கிட்டோம். இந்த அனுபவத்தை வெச்சே…

கீரை சாகுபடியை விரிவுப்படுத்தப் போறோம். அதேபோல, வேறு சில பயிர்களையும் கையில எடுக்கப் போறோம். இதன் மூலமா மொத்தமா இருக்கற 5 ஏக்கர்ல இருந்தும், ஒவ்வொரு மாசமுமே… பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.

முறையா திட்டம் போட்டு உழைச்சா, விவசாயமும், மத்த தொழில் மாதிரி லாபம் கொட்டும். ஏற்கெனவே நாங்க பார்த்துட்டிருந்த வேலையில கிடைச்ச சம்பளத்தைவிட, இன்னும் கூடுதலா விவசாயத்தின் மூலமே லாபம் பார்க்க முடியும்கிறத நிரூபிச்சே தீருவோம்என்று சூளுரைத்து விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,

சகன்னாதன், அலைபேசி : 99626-11767

கௌதம்அலைபேசி : 98406-14128

ராதாகிருட்டிணன்அலைபேசி : 97898-40630

-செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போரின் குழு மற்றும் தற்ச்சார்பு பொருளாதார வாழ்வியல்முறைக் குழு

“இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

http://www.senkettru.wordpress.com

thamilarulaham.org                   

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U

 

Advertisements

தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடக்கவேண்டிய முதல் போர்??? சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்!!!! தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்!!!!!!! நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிர்க்கோ துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது… அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?? காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என நாம் இந்திய ஒன்றியத்தை கண்டித்தோம்; இலங்கையை கண்டித்தோம்… யாராவது பிரித்தானியாவை கண்டித்தோமா ? இலங்கை பொருட்களை வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம், யாராவது பிரித்தானியா பொருட்களை வாங்காதீர் என்று போராட்டம் செய்தோமா??? இது தானே நாம் அமெரிக்க அரசு மீதும் பிரித்தானியா மீதும் இன்நொடிப்பொழுதே நாம் தொடுக்கும் போர்???… சிந்திப்பீர்??? தமிழர் வணிகத்தை ஆதரித்து முன்னிலைப் படுதுங்கள்… தமிழர் தேசதின் மொட்டு அன்றே மலரத் தொடங்கும்…

தமிழரின் நிலை உயர, இன்றைய தமிழரின் நிலையை பற்றிய சிந்தனை:

காலை எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்து இரவு தூங்க செல்லும் போது ஏற்றப்படும் கொசுவத்தி சுருள்வரை அனைத்தும் அந்நியனின் பொருளாக இருக்கிறது, அதை வியாபாரப்படுத்துவது பார்ப்பனனாகவோ அல்லது பிற மாநிலத்தை சார்தவனாகவோ இருக்கிறான். அப்போது மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்கள் எங்கே?????

அவர்கள் பன்நாட்டு நிறுவனத்திடமோ, அல்லது பிறமாநிலதவரிடமோ அடிமைகளாக வாழ்த்துகொண்டிருக்கும் நிலையில் தங்களை பெருமையாக நினைதுகொல்கின்றனர்.

 
இந்நிலை மாற வேண்டும். தமிழர்கள் அணைத்து வணிகத்தையும் தங்கள் கையில் எடுக்க வேண்டும். நாம் நமது கையில் இருந்து போகும் சிறுதுளி பணமாக இருந்தாலும் அது யாரை சென்றடைகிறது என்று சிந்தித்து செயல்பட வேண்டும்; நாம் செலவு செய்யும் பணம் ஒரு மாணத்தமிழனையே சென்றடைய வேண்டும்; என்று ஒவ்வொரு தமிழனும் இப்படி சிந்திக்கிறானோ அன்றே தமிழ் தேசியம் மலரத்தொடங்கும்.வேப்பம்குச்சில பல்துலக்கினால் பல் வெல்லையாகாதா, கோல்கேட்டுல துலக்கனா தான் வெல்லையகுமா என்ன????

சிந்திப்பர், நமது உதிரத்தை வேர்வையாக சிந்தி சம்பாதித்த பணம் வெளிநாட்டு மொதலைகளுக்கு செல்வதை தவிர்பீர்.

 
நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கத்தினர் பிரித்தானியா பொருட்களை புறக்கணிக்கவும் , உலகமயம் , தாராளமயம், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு போன்றவற்றை கண்டித்தும் முழுநாள் உண்ணா நிலை போராட்டம் நடத்தினர்.
 
இதை வணிகர் சங்கத்தின் தலைவர் திரு. வெள்ளையன் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் நாம் என்னென்ன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பதாகைகள் வைத்திருந்தனர். இந்த பகதாகைகளில் உள்ள பொருட்களை பார்த்தால் தலையே சுற்றி விடும். நீங்களே இப்படத்தை பாருங்கள்.
 
இப்படத்தில் உள்ள பொருட்களைத் தான் நம் மக்கள் அன்றாடும் பயன்படுத்துகின்றனர். இதை எப்படி நம் மக்கள் புறக்கணிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மாற்றாக கடைகளில் வேறு பொருட்கள் கிடைக்குமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டி உள்ளது.
 
இனிமேல் தமிழ் மக்கள் பொருட்கள் வாங்கினால் அது எங்கு யாரால் தயாரிக்கப்பட்டது என்று தெரிந்து வாங்க வேண்டி உள்ளது. தமிழக மக்களை பொறுத்தவரை , நாம் வாங்கும் பொருட்களில் முதல் தேர்வு தமிழக தயாரிப்பாகத் தான் இருத்தல் வேண்டும். அடுத்து நமது மொழியையும், நம்மையும்,  நமது தமிழீழத்தையும் ஆதரித்த நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, நார்வே, சுவீடன், பின்லாந்து, போன்ற நாடுகளின் பொருட்களை வாங்குங்கள். 
 
பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளை புறக்கணிப்பதற்கும் முன்பு நாம் இந்திய ஒன்றியத்தின் பொருட்களையும், தயாரிப்புகலையும்  முழுமையாக புறக்கணிக்க வேண்டும். கண்டிப்பாக இலங்கை பொருட்களை வாங்கக் கூடாது .தமிழக தயாரிப்புகளில் கண்டிப்பாக இது தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்று எழுதினால் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். பெருமைப்படும்படியும் இருக்கும். இதை தமிழக வணிகர்கள் சங்கம் சிந்திப்பார்களாக !
 
குறள் 739:

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

மு.வ உரை:

முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

திருவள்ளுவன் கூறிய வழி நின்று அனைத்தையும் நாமே உருவாக்க வேண்டும், முன்பே இருப்பதை தமிழரிடமே பெற வேண்டும்.

நாம் பன்னாட்டு நிறுவனங்களை சாராமல் காதி பவன் போன்ற கைவினை பொருட்களை வாங்கினால் அது நமக்கும் பயனுள்ளதாக இருக்கும், வாங்கும் கைத்தொழில் செய்யும் தொழிலாளர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்.விலையும் குறைவாக இருக்கும், நமது சுற்றுச்சூழளையும் மாசு படுத்தாத பொருளாக இருக்கும்.

தமிழர் தேச விடுதலையை நோகியே சிந்திப்போம்.

வென்றாக வேண்டும் தமிழ்.. அதற்க்கு ஒன்றாக வேண்டும் தமிழர்.. நாம் தமிழர்..

சிந்திப்போம் ஒவ்வொரு பொருளை வாங்கும் போதும் அதன் வேர் முதல் மூலம் வரை எங்கிருத்து வருகிறது என்று????? அன்றே தமிழர் தேசிய மொட்டு மலரத்தொடங்கும்….

Indian Rupee (INR): In 1970 1$ = Rs. 4 Today 1$ = Rs. 60.50 Estimated 1$ by end of the year = Rs. 70 Dollar is not getting stronger, rupee is getting weaker! & nobody else is responsible except us! How can we change it?
Here is an intriguing answer from someone which reached my mailbox recently and I believe its worth sharing ….

1. A Cold Drink produced for 70 80 paisa sold at Rs. 9 10! 
Stop drinking them, go to soda shops,drink lemon juice, butter milk etc. instead of coke,pepsi

2. Soaps
Use Soaps of made from kadhi kraft or cinthol,santoor,medimix, neem instead of lux,lifebuoy,rexona,liril,dove,pears,hamam,lesancy,camay,palmotive!

3. Toothpaste-
Use Neem, babool, vicco, dabur instead of colgate,close up,pepsodent,cibaca

4. Toothbrush
Use prudent,ajanta,promise instead of colgate, close up, oral-b,pepsodent,forhans

5. Shaving cream- 
Use godrej ,emami
Instead of palmotive,old spice,gillete.

6. Blade-
Use supermax,topaz,laser,ashoka
Instead of seven-o-clock,365,gillete

7. Talcum powder-
Use santoor,gokul,cinthol,boroplus 
Instead of ponds,old spice,johnson,shower
to shower.

8. Milk powder
Use indiana,amul,amulya
Instead of anikspray,milkana, everyday milk, milkmaid

9. Shampoo- 
Use Nirma, Velvette
Instead of halo, all clear,nyle sunsilk,head and shoulders, pantene

10. Mobile connections- 
Use aircel
Insteaf of vodafone

11. Food- 
Eat at jay bhavani, TGB, local restaurants 
Instead of mac-d, subway, pizza hut, kfc 

12. Mobile 
Use micromax, karbonn,virgin 
Instead of samsung,apple, htc, sony

13. Bikes-
Use hero, royal enfield
Instead of honda, yamaha

14. Footwear-
Use bata, chavda
Instead of nike, reebok,adidas,converse

15. Jeans and shirts
Use spykar, k-lounge
Instead of lee,levi’s,U.s. Polo, pepe, benetton

16. Watch 
Use titan, sonata ,fasttrack
Instead of tommy, Citizen,zodiac,tissot

Dont use items from hindustan lever, only name is hindustan it has been taken by foreign company

And we blame politicians 

Now go and check the things you use and ask yourself how much do you contribute to the decreased value of RUPEE

None of the products are subordinate in quality, they might look a bit less fancy!! 

Why is china so ahead, because the whole world uses made in china items.

We tamils could atleast use the products made by tamils! 

Change comes from within! Start the change by simply changing your mobile network and spread the change by broadcasting this msg to everyone on your contact list! 

I did my part, you do your and lets see by the end of this year does 1$ become Rs. 70 or it becomes Rs. 50

http://www.tn.gov.in/hhtk/khadi/khadi-home.htm

http://www.tn.gov.in/hhtk/khadi/khadi-village.htm

BOYCOTT INDIA, US, & UK, based companies that are involved in the genocide of tamils in srilanka.
 
START THE WAR AGAINST TERRORIST NATIONS THAT HAS PERFORMED THIS GENOCIDE
============================
AvivaBarclaysBPBritish Telecom

Cable & Wireless

Cadbury India

Cairn Energy

GSK Pharmaceuticals

HSBC

ICI India

Johnson Matthey

Logica

CMG

Marconi

Telecom

Marks & Spencer

P&O Ports

Reuters

Scope International

Shell India

Standard Chartered Bank

Unilever

Virgin Atlantic

Vodafone/airtel use aircel it’s eezha thamilar anantha krishnan’s.

Maggi-Switzerland

Nestle- Switzerland

Unilever/Tesco/

Food brands

############

Annapurna salt and atta

Bru coffee

Brooke Bond (3 Roses, Taj Mahal, Taaza, Red Label) tea

Kissan squashes, ketchups, juices and jams

Lipton tea

Knorr soups & meal makers and soupy noodles

Kwality Wall’s frozen dessert

Modern Bread, ready to eat chapattis and other bakery items

Magnum (ice cream)

Homecare Brands

###########################

ActiveWheel detergent

Cif Cream Cleaner

Comfort fabric softeners

Domestos disinfectant/toilet cleaner

Rin detergents and bleach

Sunlight detergent and colour care

Surf Excel detergent and gentle wash

Vim dishwash

Magic – Water Saver

Personal Care Brands:

###############################

Aviance Beauty Solutions

Axe deodorant and aftershaving lotion and soap

LEVER Ayush Therapy ayurvedic health care and personal care products

Breeze beauty soap

Clear anti-dandruff hair products

Clinic Plus shampoo and oil

Close Up toothpaste

Dove skin cleansing & hair care range: bar, lotions, creams and anti-perspirant deodorants

Denim shaving products

Fair & Lovely skin-lightening products

Hamam

Lakmé beauty products and salons

Lifebuoy soaps and handwash range

Liril 2000 soap

Lux soap, body wash and deodorant

Pears soap

Pepsodent toothpaste

Pond’s talcs and creams

Rexona soap

Sunsilk shampoo

Sure anti-perspirant

Vaseline petroleum jelly, skin care lotions

TRESemmé

Water Purifier Brand

########################

Pureit Water Purifier

இனப்படுகொலை இலங்கைக்கு துணைபோகும் பிரிட்டிசு பொருட்களைப் புறக்கணிப்போம். இந்த பரப்புரையை மேற்கொண்டு
வீதி வீதியாக வர இருக்கும் உங்கள் வீட்டு மாணவப் பிள்ளைகளுக்கு ஒத்துழைப்பு தாரீர்.இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்குவோம்.

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

http://www.youtube.com/watch?v=w-ZZMK-9NLQ