#பாவேந்தர் #பாரதிதாசன்

1948 ம் வருடம் 48 பக்கங்களை கொண்ட ” தமிழியக்கம் ” எனும் புத்தகத்தை ஒரே இரவில் எழுதிமுடித்தார்….பாவேந்தர் பாரதிதாசன்.

10847887_836341393097766_1769910706696673098_n

இன்றைய சூழ்நிலையில் எது அவசியமோ அதனை அன்றே உணர்ந்திருந்தார் புரட்சி கவிஞர்.
அறுபத்தியெட்டு வருடங்களாகியும் அவரது கனவு இன்னும் பலிக்கவில்லை….நீங்களும் ஒரு தடவை அவரது கனவுதான் என்ன என்பதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அவரது படைப்பிலிருந்து சில வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு……….

தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்.
தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்.
நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம்
அமையாது. சிறிதும்இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம்.

தமிழெங்கே! தமிழன்நிலை என்னஎனத் தாமறியாத் தமிழர் என்பார்
தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால்
இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில்
அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார் எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம்.

நகராட்சி சிற்றூரின் நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்று
புகல்கின்ற பலஆட்சிக் கழகங்கள் எவற்றினுமே புகநி னைப்பார்
தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமெனச் சட்டம் செய்தால்
அகலுமன்றோ தமிழ்நாட்டின் அல்லலெலாம்? அல்லாக்கால் அமைதி யுண்டோ?

தமிழறியான் தமிழர்நிலை தமிழர்நெறி தமிழர்களின் தேவை, வாழ்வு
தமையறிதல் உண்டோ?எந் நாளுமில்லை! தமிழறியான் சுவையே காணான்!
சுமைசுமையாய் அரசியல்சீர் சுமந்தவர்கள் இதுவரைக்கும் சொன்ன துண்டோ
தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில் கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய?

ஆங்கிலநூல் அறிவுக்குச் சான்றிருந்தால் அதுபோதும் அலுவல் பார்க்க!
ஈங்குள்ள தமிழர்நெறி அவர்க்கென்ன தெரிந்திருக்கும்? இதுவு மன்றி,
மாங்காட்டுச் செவிடனெதிர் வடிகட்டி ஊமையரை வைத்ததைப்போல்
தீங்கற்ற தமிழறியான் செந்தமிழ்நாட்டலுவலின்மேற் செல்ல லாமோ ?

 

Advertisements

கேட்டான் பாருங்க ஒரு கேள்வி…?? போட்டான் பாருங்க நல்ல வழக்கை..?

 

(செய்தி என்னன்னா…?

சம்ஸ்கிருதம் ( வடமொழி) இல்லாமல் தனித்து இயங்க இயலாத தெலுங்கு, மளையாளம், ஒடியா , கன்னடம் ஆகிய மொழிகளுக்கு செம்மொழி தகுதி கொடுத்தது சட்டப்படி செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கறிஞர் காந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எந்த அடிப்படையில் இந்த மொழிகளுக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது என்பது குறித்து ஆவணங்களுடன் முன்நிற்க நடுவண் அரசு அதிகாரிகளை பணித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது நடுவண் அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ராஜகோபாலன் பிறமொழி கலந்து பேசுவதாலேயே செம்மொழி தகுதி தரக்கூடாது என்றால் தமிழில் விவசாயம் என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவசாயம் என்பது தமிழ் சொல் அல்ல. எனவே தமிழுக்கு மட்டும் எப்படி செம்மொழி தகுதி அளிக்க முடியும் என்று குறிப்பிட்ட போது…

இடைமறித்த நீதிஅரசர் மகாதேவன்., விவசாயம் என்று தமிழில் பயன்படுத்தப்படும் ஒரு வடமொழி சொல்தான். ஆனால் இந்த தொழிலை குறிக்க தமிழ் சொல் இல்லாமல் இல்லை.
“உழவு” என்ற தனித்தமிழ் சொல் உள்ளது கூறினார்.

இது செய்தி.

தமிழர்களாகிய நாம் தொன்மை வாய்ந்த உயிரினும் மேலாகிய நம் தாய் தமிழை பிறமொழி கலந்து கலந்து பேசியதன் விளைவு இன்று ஒருவன்.. இவ்வாறு தமிழின் தனித்தன்மையையும், தொன்மையையும் , செம்மொழி தகுதியையும் கேள்விக்கு உள்ளாக்கி விட்டான்.

இதற்கு முழுபொறுப்பும் மொழியை பிறமொழி கலப்பு சொற்கள் கலந்து பேசி திரித்த தமிழர்களாகிய நம்மையே சேரும். ஒவ்வொரு தமிழனும் வெட்கி தலைகுனிய வேண்டிய விடயம் இது.

உழவு என்ற அதிகாரத்தை அமைத்து
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை ”

என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி தான் சுழலும் என்ற அறிவியல் உண்மையை உலகிற்கு சொன்ன வள்ளுவத்தை படித்து பயன்படுத்த தமிழர்கள் தவறியதால் வந்த விளைவு இது.

தமிழின் நம்பர் ஒன் செய்தித்தாள் என்று மார்தட்டும் ஒரு செய்தித்தாளில் வந்துள்ள இந்த செய்தியில்..
அந்தஸ்து, ஆஜராக, மத்திய, ஐகோர்ட், சொலிட்டர் ஜெனரல், ரத்து
இன்னும் எத்தனை ‘பிறமொழி சொற்கள் கலந்துள்ளது என்று கவனியுங்கள்.

தமிழ் மண்ணில் தமிழின் நிலை எந்த அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்று புரியும்.

என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்..?

அருள்நிதி அருமைதுரை

#அப்பா திரைப்படம்#

அப்பா என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான
சரியான வழிகாட்டுதல்.
#உண்டு உறைவிட தனியார் பள்ளியில்# படித்தவன்
என்ற அனுபவத்துடன் பார்க்கும்போது
என் பள்ளியின் காட்சிகள்,
அங்கு நடந்த உண்மை சம்பவங்கள்,
நான் உள்ளிட்ட என் சக மாணவர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது போல் உள்ளது.

இயக்குனர் சமுத்திரகனி மற்றும்
பட குழுவினருக்கு
நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்!!!

தமிழரை வாழவைப்பதற்கான வேலையே செய்யுங்கள், தமிழ் தானாக வாழும்!

வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கம் சார்பில் இந்தியாவில் ரிஷிகோஷ், நவிமும்பை, அந்தமான், விசாகப்பட்டினம், சென்னை ராணுவ பயிற்சி முகாம் மற்றும் அமெரிக்கா, மலேசியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ளது. தற்போது இலங்கையில் 16 இடங்களில் திருவள்ளுவர் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அவை தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், புளியங்குளம், திரிகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, மாத்தாளை, கல்முனை, கம்பகா, நாவலப் பிட்டி, தெரணியகல், அட்டன், பண்டாரவளை, இறக் வானை ஆகிய இடங்களில் நிறுவப்படுகின்றன.

—- தகவல் உதவி சகோ தமிழ்நேயன் ஏழுமலை

“தமிழ்” “தமிழ்” என்று தமிழரை அழிக்க சின்னமேளம் பயன்படுத்தியதும் இதே மூன்றெழுத்து!

நம்ம மொழி செம்மொழி..!!

“அம்மா”.. மூன்றெழுத்து..!!
“அப்பா”.. மூன்றெழுத்து..!!
“தம்பி”.. மூன்றெழுத்து..!!
“தங்கை”.. மூன்றெழுத்து..!!
“மகன்”.. மூன்றெழுத்து..!!
“மகள்”.. மூன்றெழுத்து..!!
“காதலி”.. மூன்றெழுத்து..!!
“மனைவி”.. மூன்றெழுத்து..!!
“தாத்தா”.. மூன்றெழுத்து..!!
“பாட்டி”.. மூன்றெழுத்து..!!
“பேரன்”..மூன்றெழுத்து..!!
“பேத்தி”.. மூன்றெழுத்து..!!
இவை அனைத்தும்.. அடங்கிய..
“உறவு”.. மூன்றெழுத்து..!!
உறவில் மேம்படும்..
“பாசம்”.. மூன்றெழுத்து..!!
பாசத்தில் விளையும்..
“அன்பு”.. மூன்றெழுத்து..!!
அன்பில் வழியும்..
“காதல்”.. மூன்றெழுத்து..!!
காதலில் வரும்..
“வெற்றி”.. யும்
மூன்றெழுத்து..!!
“தோல்வி”..யும்
மூன்றெழுத்து..!!
“காதல்” தரும் வலியால் வரும்..
“வேதனை”.. மூன்றெழுத்து..!!
வேதனையின் உச்சகட்டதால்
வரும்..
“சாதல்”.. மூன்றெழுத்து..!!
சாதலில் பறிபோகும்..
“உயிர்”..மூன்றெழத்து..!!
இது நான் எழுதிய..
“கவிதை”.. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!
இது
“அருமை”.. என்றால்.. அதுவும்
மூன்றெழுத்து..!!
“மொக்கை”.. என்றால்..
அதுவும் மூன்றெழுத்து..!!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ..
என்ற
“கவலை”.. யும்
மூன்றெழுத்து..!
“நட்பு”.. என்ற மூன்றெழுத்தில்
இணைந்து படித்த..
அனைவருக்கும்
“நன்றி”.. என்பதும்
மூன்றெழுத்து..!!
“மூன்று”..உம்
மூன்றெழுத்தே..!!
இவை அனைத்தும் அடங்கிய..
“தமிழ்”.. உம் மூன்றெழுத்தே..!!
“வாழ்க”.. “தமிழ்”…

உதவுங்கள் உறவுகளே!

image-2367.jpg

மலாய் மொழியில் தமிழ் வார்த்தைகள்..

(பதிவில் தமிழுக்கு நிகராக குறிப்பிடப் பட்டிருக்கும் சில வார்த்தைகள் தவறாக இருக்கிறது. அதை திருத்துவதற்கு உதவுங்கள் மலேசிய தமிழ் உறவுகளே…
There are few mistakes in quoting the malai words which are said to have derived from Tamil words… Malaysian tamil brethren, please help us to identify and rectify those mistakes…)

அகா (aka) = அக்கா
அசல் (asal) = அசல்
அதிகார (adhikaara) =அதிகாரம்
அண்டை (andai) = அண்டை(அருகே)
அதா (adha) = அது
அதவா (adhawa) = அதுவா?
அபா (abaa) = அப்பா
அமா (amaa) = அம்மா
அல்பா (alpa) = அற்பம்
ஆயா (aayaa) = செவிலித்தாய்
ஆரா (aara) = ஆறு
இஞ்சி (inji) = இஞ்சி
இலை (ilai) = இலை
உண்டில் (undil) = உண்டியல்
அயா (ayaa) = ஐயா (தந்தை)
கஞ்சி (kanji) = கஞ்சி
கட்டில் (kattil) = கட்டில்
கெடக்காய்க் (kedakaik) = கடுக்காய்
கட்டைக் (kattaik) = கட்டை
கபல் (kapal) = கப்பல்
கபுரா (gapura) = கோபுரம்
கமண்டலம் (kamandalam) = கமண்டலம்
கல்தை (kaldhai) = கழுதை
கன்யா (kanyaa) = கன்னி
காவல் (kaawal) = காவல்
குட்டையன் (kuttaiyan) = குட்டையன்
குட்டைச்சி (kuttaichi) = குட்டைச்சி
கெடை (kedai) = கடை
கூடை (koodai) = கூடை
கூலி (kooli) = கூலி
கெடலை (kedalai) = கடலை
கெண்டி (kendi) = கெண்டி
கொட்லம் (kotlam) = கொத்தளம்
குண்டை (kundai) = கொண்டை
கொலம் (kolam) = குளம்
கோட்டா (kottaa) = கோட்டை
சக்கெரா (chakera) = சக்கரம்
சதை (sathai) = சதை
சவுக்கு (savuku) = சவுக்கு
சாணை (saanai) = சாணை
சின்டனா (chendana) = சந்தனம்
சிதி (sidhi) = சித்தி
சும்மா (chummaa) = சும்மா
செண்பகா (chempaka) = செண்பகம்
சிருட் (chirut) = சுருட்டு
செர்ப்பு (cherpu) = செருப்பு
தட்கலா (thatkala) = தற்காலம்
தெண்டா (dendaa) = தண்டம்
சம்மட்டி (tchammatti) = சம்மட்டி
தெந்தா (denta) = தந்தம்
தாம்பூல் (thaambul) = தாம்பூலம்
தயேர் (thaer) = தயிர்
தாலா (thaalaa) = தாளம்
திரை (thirai) = திரை
நகர் (nagar) = நகரம்
நாடி (naadi) = நாடி
நாலி (naali) = நாழி (நேரம்)
நீலம் (neelam) = நீலம்
பட்டானி (pattaani) = பத்தினி
பட்டில் (battil) = வட்டில்
படா (badaa) = வடை
பவளம் (pawalam) = பவளம்
பரயா (paraiaa) = பறையர்
பாடை (baadai) = வாடை
பாயு (bayu) = வாயு
பித்தம் (pittham) = பித்தம்
பெலங்கு (belanggu) = விலங்கு
பீங்கான் (pinggaan) = பீங்கான்
புட்டு (puttu) = புட்டு
பெங்காட்டி (pengaatti) = பெண்டாட்டி
பெடி (peti) = பெட்டி
பெடில் (bedil) = வெடி
பெர்வீரா (perwira) = பெருவீரன்
பெரிய (peria) = பெரிய ஆள்
பெல்பகை (pelbagai) = பலவகை
பொன்னு (ponnu) = பெண்
மட்ஜம் (matjam) = மச்சம்
மகசுல் (mahasul) = மகசூல்
மந்தம் (mandham) = மந்தம்
மாங்கா (mangga) = மாங்காய்
மாமாக் (mamak) = மாமா
மாணிக்கம் (maanikkam) = மாணிக்கம்
மாலை (maalai) = மாலை
மாளிகை (maaligai) = மாளிகை
மீசை (meesai) = மீசை
முட்டு (muttu) = முத்து
மெட்டை (mettai) = மெத்தை
மொடல் (modal) = முதல்
வள்வி (walwi) = வளைவி (வளையல்)
வேப்பலை (wepalai) = வேப்பிலை
வைரம் (wairam) = வைரம்
ஜெந்தெரா (jendera) = எந்திரம்

நன்றி: ஆராய்ச்சிக் கட்டுரைகள் (நூல்)
ஆசிரியர்: ந.சஞ்சீவி

-சீனி. மாணிக்கவாசகம்.

தமிழ் தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு தினம்: ஜுன் 11, 1995

perun

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். இவருடைய பெற்றோர் துரைச்சாமியார்-குஞ்சம்மாள் ஆவர்.தொடக்க கல்வியை சேலத்திலும், ஆத்தூரில் பயின்ற இவர், பட்டப்படிப்பை சேலத்தில் பயின்றார். பயின்ற காலத்திலேயே பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும்போது கமலம் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். 1995-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இதே நாளில் மரணம் அடைந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராக கருதப்படும் இவர், தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ் தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே.

20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றபடுகிறது. தமிழ் தேசிய தந்தையாக இன்று தமிழர்களால்

ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு வீரவணக்கம் ..!!வீரவணக்கம்..!!வீரவணக்கம்..!! இன்று (11.6.2016) ஐயாவின் 21 ஆம் ஆண்டு நினைவுநாள்.

மூச்சுள்ள வரைக்கும் உலகத் தமிழின
முன்னேற்றம் ஒன்றே பேசுவேன்! – அதில்
ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும்
எதிர்நின் றிருகை வீசுவேன்!
காசுள்ள வரைக்கும் கையுள்ள வரைக்கும்
கவிந்தமிழ் ஒன்றே பரப்புவேன்! – இதை
மாசுள்ளம் கொண்டே மதித்திடார் செயல்களை
மண்மே டிட்டே நிரப்புவேன்!

காலுள்ள வரைக்கும் கருத்துள்ள வரைக்கும்
காடுமே டெல்லாம் முழக்குவேன்! – என்
மேலுள்ள அன்பால் எனைப்பற்று வோர்க்கும்
மேலும்மேல் அவ்வினை பழக்குவேன்!

உயிருள்ள வரைக்கும் உடலுள்ள வரைக்கும்
ஒவ்வோர் அணுவிலும் தமிழ்மணம்! – அவை
அயர்வுற்ற மறையினும் ஆழ்வெளி பரவினும்
அங்கங்கும் கிளர்ந்தெழும் தமிழினம்!

=========================================
-ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் – 1982

ஐயாவின் கொள்கைகளை பின்பற்றி தாய் தமிழக விடுதலையையும், தமிழீழ விடுதலையையும் வென்றெடுப்போம் என உறுதியேற்ப்போம்…!!

நாம் தமிழர் கட்சி செல்லும் பாதை சரியா?

கருநா & மாத்தையா போன்ற துரோகிகளை வைக்குமிடத்தில் பாலமன் நியூமனையும் வைக்கவேண்டும்,

ஈழத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஒவ்வொரு முறையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல எதிரான கருத்துகளை திணித்துக் கொண்டிருப்பவர் தான் இந்த பாலமன் நியூமன்,

இதை நாம் தமிழர் தலைமை உணர்ந்து பாலமன் நீயூமனை வெளியேற்ற வேண்டும், இங்குள்ளவர்கள் எல்லாம் இந்தீயத்திடம் விலைபோனவர்கள் என்று விட்டு,

இந்தீய-வடுக சிங்களத்திடம் விலைபோன பாலமன் நியூமனை ஐநா’வில் நாம் தமிழர் குரலாக ஒலிப்பார் என்றவர்கள் கொஞ்சம் ஆராய வேண்டும்,

நேற்று நடந்த கூட்டத்தில் அடாவடி செய்ய திட்டமிட்ட மே 17 கும்பலின் கைத்தடிகளின் வண்டவாளம் யாம் அறிந்ததே,

கடுதாசி எழுதிய கயவன் சுசீந்திரன் மாறன் என்ற முண்டக்கலப்பை ஏற்கனவே அதிமுக&திமுக பிரமுகர்களுக்கு சேவகம் செய்து காசு பார்த்தது,

அது மட்டுமில்லாமல் மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் காசுப்பார்த்தது மற்றும் மே 17 & தபெதிக, டொபோக்கோ கோவாலு போன்றோர்களின் கைத்தடியாக செயல்படுபவன்,

இவனை அனுப்பி வைத்த மே 17 திருமுருகன் காந்திக்கு இந்த பாலமன் நியூமனை பற்றி தெரியாதோ???

கடந்தகாலங்களில் இதே பாலமன் நியூமனை அழைத்துக்கொண்டு தானே ஊர் ஊராக சுற்றியதும் கருத்தரங்கு கூட்டங்களை நடத்தியதும்???

அதுமட்டுமில்லாமல் இதே பாலமன் நியூமனை வைத்துதானே அவ்வபோது ஐநா’வின் செயற்பாட்டு நிகழ்வுகளை சேகரித்து இங்கு மழுங்கடிக்கும் வேலையை பார்த்தது???

என்னுடைய ஐயமே ஒன்றாக இருந்த திருடர்களில் ஒருவனை உள்நுழைத்து ஈழ இனபடுகொலையை மழுங்கடிக்கும் வேலையை திறம்பட செய்ய பாலமன் நியூமனை இயக்குகிறார்களோ என்பதே???

மேலும் தன் தலைமை எதை செய்தாலும் அதை தீர ஆராயாது ரசிகக் கூட்டங்களை போல ஆராவாரம் செய்யாமல் எதையும் முழுவதுமாக ஆராய வேண்டும் நம்மவர்கள்,

மேற்கண்ட பாலமன் நியூமனை தன் கட்சியிலிருந்தும் மற்றும் அனைத்து விதமான செயற்பாட்டு தளங்களில் இருந்தும் நாதக உடனடியாக நீக்க வேண்டும்,

மேலும் கட்சியிலுள்ள சில பொருப்பாளர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிப்பதும் தலைமை கையிலெடுக்க வேண்டும்,

ஏனெனில் நம்மை சுற்றியுள்ள குருதி வெறிப்பிடித்த வடுக ஓநாய்க்கூட்டங்கள் எந்த ரூபத்திலும் உள்நுழையலாம் என்பதை கவனத்தில் கொள்வது சிறந்தது.

மக்கள் தொலைக்காட்சிப்பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள்!

“மண் பயனுற வேண்டும்” என்ற கொள்கை முழக்கத்தோடு மக்கள் நலன் காக்க திரைவிரித்ததுதான் மக்கள் தொலைக்காட்சி. பொழுதுபோக்கு ஊடகம் என்பதற்கு அப்பாற்பட்டு பொழுதை பயனுள்ளதாக்கும் ஊடகம் என்ற முதல் விதையை தூவியிருப்பது மக்கள் தொலைக்காட்சியின் தனித்துவம்.

7732 பங்குதாரர்களோடு தொடங்கப்பட்ட மக்கள் தொலைக்காட்சி இன்று உலகத்தமிழர்களின் இல்லங்களுக்கெல்லாம் அலை பரப்பிவருகிறது.

2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் ஊடக அரங்கில் கால் பதித்த மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை நோக்கம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டு கூறுகளையும் மீட்டெடுப்பதே.

தொழில்நுட்ப ரீதியில் முன்னேறினாலும் சிந்தனையில் பின்னங்கால் வைக்கும் ஊடகங்களால் உருவாகிக்கிடக்கும் வெற்றிடத்தை நிரப்புவதில் மக்கள் தொலைக்காட்சி முன் நிற்கிறது. தமிழ் நாகரீகத்தின் சமூக கூறுகளை ஏற்றம் பெறவைக்க முனைபவர்களின் சிந்தனைக் குழந்தையாகிறது மக்கள் தொலைக்காட்சி.

குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்த மக்கள் தொலைக்காட்சியின் இலக்கு தெளிவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. திறம்பட்ட ஊழியர்களின் முழு உழைப்பில் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் வார்தெடுக்கப்படுகின்றன. பார்வையாளர்களின் அறிவார்ந்த தேவையை நிரப்பும் வண்ணம் மக்கள் தொலைக்காட்சியின் கருத்தாக்கங்களின் அழகியலும், மரபியலும் சமவிகிதத்தில் மிளிர்கின்றன. இந்த புரிதலும் அர்ப்பணிப்பு உணர்வும்தான் மாநகரத்தின் எல்லை தாண்டி குக்கிராமங்களின் குடிசைவரை மக்கள் தொலைகாட்சியை இட்டுச்செல்கின்றன. மக்கள் தொலைக்காட்சியின் ஒவ்வொரு முயற்சியும் பார்வையாளர்களின் நேரத்தை பயனுள்ள நேரமாக்க வேண்டும் என்பதே.

படப்பிடிப்பு தளங்களிலும் தயாரிப்பு வசதிகளிலும் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மக்கள் தொலைக்காட்சி தன்னகத்தே கொண்டுள்ளது. மிகத்திறமைவாய்ந்த தொழில்நுட்ப குழுவினரும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், தயாரிப்பாளர்களும், செய்தியாளர்களும் மக்கள் தொலைக்காட்சியின் கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுக்கின்றனர்.

உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் ஊடகத்தேடலை மக்கள் தொலைக்காட்சி நன்கு புரிந்துகொண்டுள்ளது. அதனால்தான் கிராமங்கள் தொடங்கி பன்னாடுவரை ஒவ்வொரு நிமிடத்தின் அசைவுகளையும் செய்திகளின் வாயிலாக உலகத்தமிழர்களுக்கு தடையின்றி வழங்கிவருகிறோம். இந்த முன்னேற்ற பாதையில் மக்கள் தொலைக்காட்சிக்கு சிறந்த தொலைக்காட்சி என்ற அங்கீகாரம் வழங்கி முன்னணி தமிழ் வார நாளிதழ்கள் கௌரவித்துள்ளது. அதே போன்று பெண்ணிய சிந்தனை மேம்பாட்டு முன்னேற்றத்திற்காக UNFPA லாட்லி விருது அளித்தது. இதற்கெல்லாம் மேலாக மக்களின் மனங்களின் – தரமான படைப்புகளால் நிறைவான இடம்பிடித்து அலை வீசி வருகிறது மக்கள் தொலைக்காட்சி.

மண் பயனுறவேண்டும் என்ற இந்த லட்சிய பயணம் தடுமாற்றமில்லாமல் என்றென்றும் தொடரும்…..

த்ரிஷாவின் டபுள் சீஸன்..

Actress trisha fb

த்ரிஷா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் நாயகி படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்த படத்திலும் இரட்டை வேடம்தான் என்று செய்திகள் கசிகின்றன.

இந்தப் படத்தை இயக்குனர் மாதேஷ் இயக்குகிறார் என்றும் செய்திகள் நீள்கின்றன. கோலிவுட்டில் நடுவில் விட்ட இடைவெளியை நிரப்ப, அடுத்தடுத்து டபுள் பிரமோஷன் பெற்றிருக்கும் த்ரிஷா காட்டில் அடைமழைதானாம்.

அஜித்- விஜயை தவிர்க்கும் நயன்தாரா?

Nayanthara

தனிக்காட்டு ராணியாக வலம் வரும் நயன்தாரா, ஆரி, ஜெய்யெல்லாம் கூட, நயன் நயன் என்று வெளிப்படையாக பேட்டி கொடுக்கிற அளவுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். படப்பிடிப்புக்கு போனால், ஹீரோக்களே பரபரப்பாகி ஓடி வருவதை இவர்களுடன் சேர்ந்து நடிக்கும் போது அனுபவித்து விட்டாரல்லவா? அந்த மரியாதையும் வணக்கமும் தொடர வேண்டும் என்றால், இவர்களை போன்றவர்கள் தான் சரி, என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நயன்தாரா.

விஜய், அஜீத் படங்கள் என்றால், பரபரப்பும் மரியாதையும் அவர்களை சுற்றியே இருக்கும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இனி அஜீத் விஜய் படங்கள் வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் நயந்தாரா. இந்த விஷயம் கேள்விப்பட்டு விமல், விஷ்ணுவெல்லாம் கூட,நயன் கால்ஷீட் கிடைக்குமா பாருங்களேன் என்கிறார்களாம்.

அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் பத்மப்ரியா!

Padmapriya fb

மலையாளம், தமிழி்ல் அதிகமான படங்களில் நடித்து திறமையான நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகை பத்மப்ரியா. 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், திருமணத்திற்கு பின் மும்பையில் குடியேறி படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில, பத்மப்ரியா திரும்பவும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அந்தவகையில, ரஞ்சித் பலிட் இயக்கத்தில்‘த அர்பன்’என்னும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் பத்மப்ரியாவுடன் மாளவிகா மேனன், கமாலினி முகர்ஜி ஆகியோரும் இடம்பெற உள்ளனர்.

இது மட்டுமில்லாமல், ‘அய்யோபிண்டே புஸ்தகம்’ படம் மூலமாக மலையாளத்திலும் ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

மீண்டும் தனது நடிப்புத் திறமையை திருநங்கை வேடத்தில் நடித்து விக்ரம் வெளிப்படுத்துகிறார்!

Vikram

விக்ரம் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அது முடிய மூன்று ஆண்டுகளாகும் என்ற நற்பெயர் தமிழ் சினிமாவில் உள்ளது. அவர் ஒப்புக் கொள்ளும் படங்கள் அப்படிப்பட்டவை. இரு முகன் படம்கூட இன்னும் முடியவில்லை. ஏன் இந்த நற்பெயர் என சீயானைச் சீண்டினால், ’நான் படங்களின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை, தரத்திற்குதான் முக்கியத்துவம் அளிக்கிறேன். படத்திற்காக என்னை எப்படி மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அதனால் சில படங்களுக்கு அதிக நாள்கள் தேவைப்படுகிறது’ என்கிறார். இரு முகன் படத்தில் விக்ரமுக்கு இரண்டு வேடங்கள். அதில் ஒன்று திருநங்கை வேடமாம்.
மற்றொன்டிற்கு காத்திருங்கள் ரசிகர்களே, வெகு விரைவில் வெளியிடுவோம்!

நாம் தமிழருக்கோ பாமகவிற்க்கோ ஓட்டுப் போட்டால் ‘கோ 2’ பட டிக்கெட் 2 இலவசம்!

ஓட்டுப் போட்டால் ‘கோ 2’ பட டிக்கெட் 2 இலவசம்!

Ko....

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் ஓட்டுப் போட்டால் ‘கோ 2’ படத்தின் 2 டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

பாபி சிம்ஹா, நிக்கி கல்யாணி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் சரத் இயக்கியிருக்கும் ‘கோ 2’ படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் வரும் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்நிலையில், மே 16 ஆம் தேதி வாக்களிப்பவர்கள், உங்கள் விரல் மையுடன் ஒரு செல்பி மற்றும் உங்கள் முகவரியை 8682888038 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்பினால் குலுக்கல் முறையில் 500 வாக்காளர்களுக்கு ‘கோ 2’ பட டிக்கெட்டுகள் வீடு தேடி வரும் என படக்குழு கூறியுள்ளது.

தேவையற்ற தங்கம் ஒழிக!

 
தமிழர் நாடு தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்ததும்
 
போரில் நம்மைத் தோற்கடிப்பது முடியாது என்று உணர்ந்தபிறகுசுற்றியிருக்கும் நாடுகள் நம்மைத் தனிமைப்படுத்துவார்கள்
பொருளாதாரத் தடைவிதிப்பார்கள்உணவுக்கு நம் தாய்மண் இருக்கிறது
பொருளாதாரத்திற்கு என்ன செய்வது?
அதற்குதான் காலம் காலமாக நாம் சேர்த்துவைத்திருக்கும் தங்கத்தை 80% தமிழ் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்
 
அதை வெளியே விற்று நமக்கு தேவையான ஆயுதங்களையும் போர் தளவாடங்களையும் மற்றும் வெளிநாட்டிலிருந்து எதையெல்லாம் கொண்டுவரவேண்டுமோ அவற்றையெல்லாம் கொண்டுவரவேண்டும்
 
ஆப்பிரிக்க நாடுகளில் ஆயுதக் குழுக்கள் வைரத்தை தமது பொருளாதாரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்
(blood diamond, அயன் போன்ற படங்களில் காட்டியிருப்பார்கள்)
 
நம்மிடம் இருப்பது தங்கம்தான்.
 
தமிழர்கள் தங்கத்தின் மீதுள்ள ஆசையை துறக்க வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளில் தங்க மோகம் கிடையாது.
அங்கே அழகுக்கென்று வேறு பல பொருட்கள் பயன்படுகின்றன.
 
இங்கேயோ தங்க மோகம் தலைவிரித்தாடுகிறது.
ஒரு பெண்ணின் திருமணத்திற்கு நகை சேர்க்க பெற்றோர்கள் முழு வாழ்க்கையையும் உழைத்தே தொலைக்க வேண்டியுள்ளது.
 
தங்கம் அணிவது அழகு என்ற மனப்பான்மை மாறவேண்டும்.
தங்கம் வைத்திருப்பது சொத்து என்ற மனப்பான்மையும் மாற வேண்டும்.
 
தங்கத்தின் விலை கூடுகிறதே தவிர தங்கத்தை பெரும்பொருள் கொடுத்து வாங்கி அதை அணிந்து சிறிது காலத்திற்குப் பிறகு விற்பவருக்கு நட்டம்தான் ஏற்படுகிறது.
 
பணத்தை முதலீடு செய்து பெருக்க தங்கம் வாங்குவதைவிடவும் எத்தனையோ உபயோகமான வழிகள் உள்ளன.
 
தமிழ் மண்ணில் தங்கத்திற்கு தனிமதிப்பு இருக்கக்கூடாது.
ஏன் உலகில் முழுவதுமே தங்கம் வைரம் போன்றவை ஒழிக்கப் படவேண்டியவை.
 
தங்கத்தை எடுக்கிறோம் என்ற பெயரில் நிலத்தைத் தோண்டிக்கொண்டே போகிறோம். தங்கம் கிடைப்பது அரிதாகிக்கொண்டே போகிறது, ஆனாலும் அதற்கான தேவை இருக்கிறது. இதன் காரணமாக அதன் விலை உயர்ந்துகொண்டே போகிறது.
 
ஆனால் தங்கச்சுரங்கங்களும் வைரச்சுரங்கங்களும் பல கிலோமீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
 
அந்த மண்ணை வேளாண்மைக்கும் குடியிருக்கவும் இன்னும் எத்தனையோ நன்மைகளுக்கும் பயன்படுத்தலாம்.
 
தமிழர்கள் வாழும் பகுதியான கோலார் பகுதி கன்னடரிடம் பறிபோய் இருத்த தங்கம் அத்தனையும் தீர்ந்தபிறகு அப்படியே கைவிடப்பட்டுள்ளது.
கோலார் தமிழர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மண் பாழானதுதான் மிச்சம்.
 
இதேபோல இயற்கை வளங்கள் அனைத்தும் அப்பகுதி மக்களுக்கு நன்மையாக அமையவிடாமல் பெருமுதலாளிகள் கொள்ளையடித்து தங்கள் வங்கிக்கணக்கில் அளவுக்கதிகமாக பணமாக மாற்றி தூங்கவைத்துள்ளனர்.
 
மண்ணைத் தோண்டவேண்டும் என்பதற்காக மக்கள் விரட்டப்படுகிறார்கள்; ஏமாற்றப்படுகிறார்கள்.
அடக்கு முறையை எதிர்கொள்கிறார்கள், போரை எதிர்கொள்கிறார்கள், பொருளாதார சுற்றிவளைப்பை எதிர்கொள்கிறார்கள்.
உயிரிழக்கிறார்கள், உடமைகளை இழக்கிறார்கள்.
 
இறுதியில் அரை வயிறு கஞ்சிக்கும் அற்ப கூலிக்கும் சொந்த மண்ணைத் தோண்டும் தொழிலாளியாக ஆகி, தமிழர்கள் கடினமாக வேலைவாங்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான செயல்களில் புகுத்தப்பட்டு உடல் வலு இழந்து உயிரைவிடுகிறார்கள்.
 
இதுவரை உலகில் தோண்டியெடுக்கப்பட்ட தங்கம் எகிப்தில் இருக்கும் பிரமீடு அளவு கூட கிடையாது. ஆனால் அதற்காகப் பாழாக்கப்பட்ட மண் பல ஆயிரம் பிரமீடுகள் அளவு.
 
தங்கம் உடலுக்கு பெரிய அழகோ நன்மையோ அளிப்பதில்லை.
 
தங்கம் ஒரு மாயை அதை ஒழிப்போம்.
தங்கம் ஒரு பாவப்பொருள் அதை வெறுப்போம்.
மண்ணை அழித்து அழகைப் பெறும் முட்டாள்களாக நாம் இருக்க வேண்டாம்.
 
உலகம் திருந்தும் முன் நாம் திருந்துவோம்.
நம் மண்ணை நாம் பாதுகாக்க தங்கத்தை பயன்படுத்துவோம்.
தங்கம் அணியத் தடைவிதிப்போம்.
 
ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது அதன் இயற்கைவளங்கள் ஆகும். ஒரு நாட்டின் உண்மையான ஆடம்பரம் என்பது அதனுடைய மக்களின் உடல் ஆரோக்கியம் ஆகும்.
 
நம்மைப் பார்த்து உலகம் திருந்தும். தங்கம் வைரம் போன்றவை ஒழியும்.
மண் காப்பாற்றப்படும். அதன் மீது வாழும் மக்கள் காப்பாற்றப்படுவர்.
சுரங்கத் தோண்டும் அடிமைத் தொழிலாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும். ஏழை பணக்காரன் தோற்ற வேறுபாடு குறையும்.
தங்கம் அணிவது கைவிடப்பட்டால் தங்கம் ஒரு வெறும் உலோகமே என்பது புரியும். அதன் தேவை குறையும்.
விலை குறையும். இறுதியில் அது ஒழிந்துபோகும்.
மேலும் வாசிக்க..,
 

வெங்காய ராமசாமியைப் பற்றி பல நல்ல உள்ளங்களில் பதிந்து விட்ட தவறான கருத்துக்கள். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் 5 நிமிடங்கள் ஒதுக்குங்கள்

Hello, pls understand that parpan is a misuse of Tamil word wrongly handled by E.V.Ramasamy. Parpan denotes the noble people of Tamil society. Whereas bhramins are occupying bhramins. E.V.R. abused only Tamil noble people, not bhramins. Reservation do not make any special job opportunities. It …

ஆங்கிலம் மேலோட்டமானது . தமிழ் உயிரோட்டமானது.

ஏதாவது தப்பு பண்ணிட்டு ஆங்கிலத்தில் ‘சாரி’ கேக்க மனசு தயங்குவதில்லை .
ஆனால் தமிழில் “மன்னிப்பு” கேக்க சற்றே தயங்குகிறோம் .
.
ஏன்னா தமிழ் வார்த்தைகளுக்கு தான் வலிமை அதிகம்.
.
.
ஆங்கிலத்தில் ‘டேக் கேர்’ என்று சொல்பவர்களை விட
தமிழில் “பாத்து, பத்திரம்&#8221…

தமிழ் நமக்கு மட்டும் தாய் மொழியல்ல, உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழே தாய்மொழி

A – Apple
B – Ball
என்று பொருளை உதாரணமாகக்
காட்டி மொழியை சொல்லிக்
கொடுத்த உலகில்…..,

அ – “அறம் செய்ய விரும்பு”
ஆ – “ஆறுவது சினம்”
என்று அறத்தையும், பண்பையும்,
வீரத்தையும் உதாரணமாக
காட்டி மொழியை சொல்லிக்
கொடுத்த தமிழ் மொழியே உலகின்
சிறந்த மொழியாகும்…….

-செங்கீற்றின் தமிழர் தேசம்

கல்வியும் மருத்துவமும் இலவசமாக கிடைக்கச் செய்வோம்; சங்கத் தமிழர் வழி நடப்போம்!!!

மாடுகளில் உள்ள புண்களை கவனிக்காமல் விட்டால் அவற்றில் புழுக்கள் உருவாகிவிடும். புண்களில் உள்ள புழுக்கள் வெளியே வந்தால்தான் குணமாகும். இதற்கு சாமந்தி, சீத்தாப்பழ இலை, தும்பைச் சாறு இவற்றில் எதாவது ஒன்றை எடுத்து சாறு பிழிந்து விடுங்க. புண்ணுல இருக்கிற புழு வெளியே வந்துவிடும். புண்ணும் ஆறிவிடும்….

9.5.1941-‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் நினைவு நாள்

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்த நின்புகழ் ஓங்குக!
முதல், இடை,கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை தேவர், மற்றொருவர் உமா மக…

வெங்காய ராமசாமியைப் பற்றி பல நல்ல உள்ளங்களில் பதிந்து விட்ட தவறான கருத்துக்கள். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் 5 நிமிடங்கள் ஒதுக்குங்கள்

Hello, pls understand that parpan is a misuse of Tamil word wrongly handled by E.V.Ramasamy. Parpan denotes the noble people of Tamil society. Whereas bhramins are occupying bhramins. E.V.R. abused only Tamil noble people, not bhramins. Reservation do not make any special job opportunities. It …

ஆங்கிலம் மேலோட்டமானது . தமிழ் உயிரோட்டமானது.

ஏதாவது தப்பு பண்ணிட்டு ஆங்கிலத்தில் ‘சாரி’ கேக்க மனசு தயங்குவதில்லை .
ஆனால் தமிழில் “மன்னிப்பு” கேக்க சற்றே தயங்குகிறோம் .
.
ஏன்னா தமிழ் வார்த்தைகளுக்கு தான் வலிமை அதிகம்.
.
.
ஆங்கிலத்தில் ‘டேக் கேர்’ என்று சொல்பவர்களை விட
தமிழில் “பாத்து, பத்திரம்&#8221…

தமிழ் நமக்கு மட்டும் தாய் மொழியல்ல, உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழே தாய்மொழி

A – Apple
B – Ball
என்று பொருளை உதாரணமாகக்
காட்டி மொழியை சொல்லிக்
கொடுத்த உலகில்…..,

அ – “அறம் செய்ய விரும்பு”
ஆ – “ஆறுவது சினம்”
என்று அறத்தையும், பண்பையும்,
வீரத்தையும் உதாரணமாக
காட்டி மொழியை சொல்லிக்
கொடுத்த தமிழ் மொழியே உலகின்
சிறந்த மொழியாகும்…….

-செங்கீற்றின் தமிழர் தேசம்

” பெண்ணியம் போற்றிய தமிழினம் “

கும்பகோணம் அருகே தாராசுரம் ஐராவதேசுவரர் கோவிலில் உள்ள சிற்பங்களில் ஒன்று. பெண்கள் போர் பயிற்சியில் ஈடுபடுவதுப் போல் உள்ளது…
” கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம் ”

-ஆம் நாங்கள் தமிழர்கள்

கல்வியும் மருத்துவமும் இலவசமாக கிடைக்கச் செய்வோம்; சங்கத் தமிழர் வழி நடப்போம்!!!

மாடுகளில் உள்ள புண்களை கவனிக்காமல் விட்டால் அவற்றில் புழுக்கள் உருவாகிவிடும். புண்களில் உள்ள புழுக்கள் வெளியே வந்தால்தான் குணமாகும். இதற்கு சாமந்தி, சீத்தாப்பழ இலை, தும்பைச் சாறு இவற்றில் எதாவது ஒன்றை எடுத்து சாறு பிழிந்து விடுங்க. புண்ணுல இருக்கிற புழு வெளியே வந்துவிடும். புண்ணும் ஆறிவிடும்….

9.5.1941-‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் நினைவு நாள்

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்த நின்புகழ் ஓங்குக!
முதல், இடை,கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை தேவர், மற்றொருவர் உமா மக…

வெங்காய ராமசாமியைப் பற்றி பல நல்ல உள்ளங்களில் பதிந்து விட்ட தவறான கருத்துக்கள். தயவுசெய்து உங்கள் வாழ்க்கையில் 5 நிமிடங்கள் ஒதுக்குங்கள்

Hello, pls understand that parpan is a misuse of Tamil word wrongly handled by E.V.Ramasamy. Parpan denotes the noble people of Tamil society. Whereas bhramins are occupying bhramins. E.V.R. abused only Tamil noble people, not bhramins. Reservation do not make any special job opportunities. It …

ஆங்கிலம் மேலோட்டமானது . தமிழ் உயிரோட்டமானது.

ஏதாவது தப்பு பண்ணிட்டு ஆங்கிலத்தில் ‘சாரி’ கேக்க மனசு தயங்குவதில்லை .
ஆனால் தமிழில் “மன்னிப்பு” கேக்க சற்றே தயங்குகிறோம் .
.
ஏன்னா தமிழ் வார்த்தைகளுக்கு தான் வலிமை அதிகம்.
.
.
ஆங்கிலத்தில் ‘டேக் கேர்’ என்று சொல்பவர்களை விட
தமிழில் “பாத்து, பத்திரம்&#8221…

தமிழ் நமக்கு மட்டும் தாய் மொழியல்ல, உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழே தாய்மொழி

A – Apple
B – Ball
என்று பொருளை உதாரணமாகக்
காட்டி மொழியை சொல்லிக்
கொடுத்த உலகில்…..,

அ – “அறம் செய்ய விரும்பு”
ஆ – “ஆறுவது சினம்”
என்று அறத்தையும், பண்பையும்,
வீரத்தையும் உதாரணமாக
காட்டி மொழியை சொல்லிக்
கொடுத்த தமிழ் மொழியே உலகின்
சிறந்த மொழியாகும்…….

-செங்கீற்றின் தமிழர் தேசம்